அரும்பாக்கம் மக்களுக்கு மறுகுடியமர்வு: சென்னை மாநகராட்சி தகவல்

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (17:56 IST)
அரும்பாக்கம் மக்களுக்கு மறுகுடியமர்வு: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள மக்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு வீடு ஒதுக்கி குடிஅரசு செய்யும்வரை ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தகுதி உள்ளவர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு குடிசை பகுதியில் மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் 93 ஏக்கர் ஆக்கிரமிப்பு குடியிருப்பில் வசித்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயகரமான இடத்திலிருந்து இந்த பகுதி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்