சென்னையில் 3ஆவது அலை வரும்: மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (12:56 IST)
பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை சென்னைக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்தது என்றும் அதற்கான காரண குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொதுமக்கள் கவனமாக கவனக்குறைவாக இருந்தால் மூன்றாவது அலை கண்டிப்பாக வந்துவிடும் என்றும் கூறிய அவர் திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளி என்று அருகருகே அமர்ந்து சாப்பிடக்கூடாது என்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்