"என்கவுண்டர் கேங்ஸ்டர்" படப்பூஜையை தொடங்கி வைத்தார்- புதுச்சேரி முதல்வர் N.ரங்கசாமி!

J.Durai

திங்கள், 6 மே 2024 (10:40 IST)
மோட்டார் பைக்குகளை வைத்து வித்தியாசமான "ரேசர்" படத்தை இயக்கிய  சதீஷ் என்கிற சாட்ஸ்ரெக்ஸ்   தனது அடுத்த படைப்பாக கதை,திரைக்கதை, வசனம் எழுதி என்கவுன்டர் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து நடக்கும் கேங்ஸ்டர் கதையை இயக்குகிறார்.
 
உண்மை சம்பவத்துடன் கற்பனையும் சேர்த்து பக்கா அதிரடி ஆக்க்ஷன் கதையாக  ஹாலிவுட் பாணியில் இத்திரைப்படம் உருவாகிறது.
 
ரேசர் படத்தை தயாரித்த ஹஸ்ட்லர்ஸ்  என்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக்ஜெயாஸ்   அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார். 
 
புரொக்டக்ஷன் நம்பர் 2 ஆக உருவாகும் இப்படத்திற்கு விரைவில் டைட்டில் அறிவிக்கப்பட்ட உள்ளது.
 
விக்கி மேக் ஒளிப்பதிவு செய்கிறார்.பரத் இசையமைக்கிறார் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களால் இத்திரைப்படம் உருவாகிறது.
 
இப்படத்தில் கதாநாயகனாக அகில் சந்தோஷ் நடிக்க கதாநாயகியாக பர்வீன் நடிக்கிறார், முக்கிய வேடத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், சில்மிஷம் சிவா,  சிவம் ,  அருண்உதயன், குட்டி கோபி,பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
 
இப்படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில்  நடந்தது. புதுச்சேரி  முதலமைச்சர்  மாண்புமிகு ரங்கசாமி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தொடங்கின.
 
சுமார் 50 ஏக்கருக்கு மேற்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியில்  படத்தின் முதல் படப்பிடிப்பு காட்சி தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்