தூத்துக்குடி தெற்கு கார்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பல வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு அருகேயே நடராஜன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். நடராஜனின் வீட்டில் மரிய அந்தோணி என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அந்தோணி அடிக்கடி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதால் அவரை வீட்டை காலி பண்ணி அனுப்பியுள்ளார் நடராஜன்.
இதனால் நடராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த மரிய அந்தோணி இரவு மது அருந்தி விட்டு வந்து நடராஜன் வீட்டிற்கு முன்னாள் நின்றிருந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த 9 பைக்குகள் எரிந்து சாம்பலான நிலையில் நடராஜன் வீட்டிற்குள்ளும் தீ பற்றியதால் உள்ளே உறங்கி கொண்டிருந்த அவர் மகன் அண்ணாமலை தீ பற்றி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். நடராஜன் தீ காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.