பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது: இந்து மக்கள் கட்சி அதிரடி அறிவிப்பு..!

Siva

திங்கள், 1 ஏப்ரல் 2024 (09:08 IST)
எங்களுக்கு உரிய மரியாதை அளிக்காததால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு இல்லை என இந்து மக்கள் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நாகப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளர் தங்களை மதிக்கவில்லை என்று கூறி பாஜக வேட்பாளருக்கான ஆதரவை இந்து மக்கள் கட்சியை திரும்ப பெற்றுள்ளது

பாஜக சார்பில் இந்த தொகுதியில் ரமேஷ் என்பவர் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்து மக்கள் கட்சிக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இதையடுத்து நேற்று நடந்த இந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ரமேஷ் தங்கள் கட்சி மற்றும் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கொடி புகைப்படம் ஆகியவற்றை புறக்கணித்ததாகவும் அதனால் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்றும் பாஜக ஆதரவாக தேர்தல் பணி செய்ய மாட்டோம் என்றும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது

நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை புறக்கணிப்போம் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்தாலும் மற்ற பகுதிகளில் பாஜகவுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்