நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர்.
இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. இதனால் பெட்ரோல் விலையும் பழையபடியே விற்பனை செய்யப்பட்டு வந்தது.