ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு தடை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதன், 23 மே 2018 (11:47 IST)
ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது பிரிவை விரிவாக்கம் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் 2-வது பிரிவின் விரிவாக்கத்திற்கு எதிராக பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கீளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டர்லைட் ஆலையின் 2-வது பிரிவை விரிவாக்கம் செய்ய தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்பதாக ஸ்டெரலைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் சமூக ஆர்வலர்களும், போராட்டகாரர்களும் தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்