இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை.. சென்னையில் எப்படி இருக்கும்?

Mahendran

புதன், 12 ஜூன் 2024 (10:07 IST)
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், கடல் அலை அதிக உயரத்திற்கு எழும்பும் என இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
 
குறிப்பாக கன்னியாகுமரி கடலில் 2.5மீ., ராமநாதபுரம் கடலில் 2.8மீ., நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடலில் 2.6மீ. உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என்றும் இந்திய கடல்சார் தகவல் மையம்  தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்