திருநங்கை, திருநம்பிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கிரேஸ்பானு தரப்பில் ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கைகளையும், திருநம்பிகளையும் தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும், எந்த ஒரு பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.