கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Siva

புதன், 20 நவம்பர் 2024 (11:24 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மனுதாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரணை செய்யும் என்றும், இதன் மூலம் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்