10 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

சனி, 30 செப்டம்பர் 2023 (14:42 IST)
தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்று  காஞ்சிபுரம், கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்