அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னையில் கூட இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதால் தமிழகம் கேரளா ஆகிய பகுதிகளில் இனி வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்று குறிப்பாக அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது சென்னை நகர் முழுவதும் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva