சென்னையில் மேகமூட்டம்.. 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்..!
ஞாயிறு, 21 மே 2023 (13:50 IST)
சென்னையில் இன்று மேகமூட்டம் இருக்கும் என்றும் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.