இன்று காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்யும்: 11 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

புதன், 1 நவம்பர் 2023 (09:00 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதை எடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது 10 மணிக்கு மேல் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
 
மேலும் தமிழகம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று பள்ளி கல்லூரி மற்றும் அலுவலக வேலை நாள் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்