இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்றும் நாளையும் அதாவது ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் உள்ள சில இடங்கள் வட தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வடதமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழகத்தில் சில இடங்கள், வட தமிழகத்தில் சில இடங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.