என் கணவரை பழிவாங்க பொய்யான குற்றச்சாட்டு: கைதான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மனைவி புகார்

வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:29 IST)
எனது கணவரை பழிவாங்கவும் அவரது நல்ல பெயரை கெடுக்கவும் அவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன் மனைவி திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் அவர் தனது கணவருடன் பணியாற்றிய இரண்டு பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பெயரில்தான் முன்னாள் மாணவி இந்த குற்றச்சாட்டை அளித்துள்ளார் என்றும் மூத்த பேராசிரியர்கள் தனது கணவரை பாராட்டியதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அந்த இரண்டு பெண் ஆசிரியைகள் முன்னாள் மாணவியை தூண்டி விட்டு பொய்யான புகாரை அளிக்க வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் மாணவி கலாஷேத்ராவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரிடம் தனது கணவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அதற்கு பழி வாங்கும் நோக்கில் தான் அவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாகவும் மனைவி திவ்யா தெரிவித்துள்ளார். 
 
மேலும் மாணவியை புகார் கொடுக்க தூண்டிவிட்ட இரண்டு பெண் பேராசிரியர்களின் பெயர்களையும் திவ்யா, தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்