பாலியல் புகார் எதிரொலி: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

திங்கள், 3 ஏப்ரல் 2023 (16:36 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பெயர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அந்த பேராசிரியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் குள்ளான பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சீத்லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகிய நான்கு பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் இன்று காலை ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் புகாருக்குள்ளான கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்