ஊருக்கே சோறு போட்ட மக்கள் இன்னைக்கு சோத்துக்கு ஏங்குறாங்க!! ஹர்பஜன் சிங் உருக்கமாக ட்வீட்

திங்கள், 19 நவம்பர் 2018 (12:37 IST)
ஊருக்கே உணவு வழங்கிய மக்கள் கஜா புயலால் உணவின்றி தவிக்கிறார்கள் என ஹர்பஜன் சிங் உருக்கமாக டுவீட் போட்டுள்ளார்.
பேயாட்டம் ஆடிய கஜாவால் டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் "ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே என உருக்கமாக டுவீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்