10 ஆயிரம் கோடியை விழுங்கிய கஜா புயல்: தமிழக அரசு பரபரப்பு தகவல்

திங்கள், 19 நவம்பர் 2018 (11:08 IST)
கஜா புயலால் 10,000 கோடி அளவுக்கு சேதமடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. 
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 1,00,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவாரணப் பணிகளும், மறு சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
 
நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேதமடைந்த பகுதிகளை பார்வையிட இருக்கிறார்.
 
இந்நிலையில் கோரதாண்டவம் ஆடிய இந்த கஜா புயலால் சுமார் 10,000 கோடி அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், முதல்கட்டமாக சீரமைப்புக் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்