’’ இளவரசியிடம் ஒப்படையுங்கள்...’’சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்த சசிகலா...
புதன், 27 ஜனவரி 2021 (19:31 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வந்த நிலையில் இன்றுடன் அவர் தண்டனை முடிவடைந்தது. இதனை அடுத்து அவர் இன்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து விடுதலையானார்.
சிறை தலைமை கண்காணிப்பாளர் சேசவ் மூர்த்தி மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் சிறையில் இருந்து காலை 9 மணியவில் விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்று சசிகலா விடுதலைப் பணிகளை முறைப்படி மேற்கொண்டனர்.
சசிகலா சிறையில் இருந்து விடுதலையானாலும் அவருக்கு கொரொனா தொற்று அறிகுறி இருந்து அதற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் தொடர்ந்து 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தனக்கு வந்த கடிதங்களையும் உடைகளையும் இளவரசியிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
சசிகலா சிறையில் இருந்த கடந்த நான்காண்டு கால ஆட்சிக்காலத்தில் அவருக்குச் சுமார் 1500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்ததாகவும் அதனை இளவரசியிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.