சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை செயலாளருக்கு மனு!

செவ்வாய், 26 ஜனவரி 2021 (16:48 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் நாளை அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் இருப்பினும் இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன
 
இந்த நிலையில் சசிகலாவின் பாதுகாப்பை கருதி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவரது வழக்கறிஞர் ராஜராஜன் அவர்கள் மத்திய உள்துறை செயலகத்திற்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த மனுவில், ‘நடிகை கங்கனா ரனாவத்திற்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டது போல் அதிக தொண்டர்களை கொண்ட சசிகலாவுக்கு Z + பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்