12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு - இன்று ஹால் டிக்கெட் ரிலீஸ்!

சனி, 31 ஜூலை 2021 (08:56 IST)
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது.

 
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சமீபத்தில் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விருப்பதேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சில நாட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில் விண்ணப்பங்களுக்கான தேதி முடிந்த நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்