சமீபத்தில், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஊடங்கள் குறித்தும், பிராமணர்கள் குறித்தும், தலித்துகளின் போராட்டம் குறித்தும் அநாகரிமாக விமர்சித்தார். இதனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து இதற்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த போதும் இந்த சர்ச்சை முடிவதால் இல்லை. ஆம், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், நான் என்னைப்பற்றி பேசினால் எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் R(oad) S(ide) பாரதி தலித் சமுதாயத்தை கொச்சை படுத்தியது கண்டிக்கத்தக்கது.
அது மட்டுமல்ல அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். தொடர் தர்ணா போராட்டம் நடத்த தலித் சகோதரர்கள் வற்புறுத்துகின்றனர் என பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.