21 ஆம் நூற்றாண்டின் பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி வரிதான் - சுப்பிரமணியன் சுவாமி !

புதன், 19 பிப்ரவரி 2020 (19:24 IST)
21 ஆம் நூற்றாண்டின் பெரிய முட்டாள்தனம் ஜி.எஸ்.டி வரிதான் - சுப்பிரதமணியன் சுவாமி !

கடந்த 2017 ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட ஜி.எஸ்.டி வரிதான் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் என பாஜக மூத்த தலைவர் மற்றும் பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
 
இன்று, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அரங்கில் இந்தியா 2030க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு என்ற தலைப்பில் ஒரு கருத்தங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக எம்பி  கூறுயதாவது :
 
வரும் ஆண்டுக்கு 10 % பொருளாதார வளர்ச்சி இருந்தால்தான் இந்தியா 2030க்குள் பொருளாதார வல்லரசாக முடியும். 21 ஆம் நூற்றாண்டில் பெரிய முட்டாள்தனம் என்னவென்றால் அது மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிதான் என தெரிவித்தார். மேலும், முதலீட்டாளர்களுக்கு வருமான வரி மூலம் நெருக்கடி தரக்கூடாது என தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்