முக ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும்: பாஜக பிரமுகர் எச்.ராஜா எச்சரிக்கை

திங்கள், 17 ஏப்ரல் 2023 (11:24 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என பாஜக பிரமுகர் எச் ராஜா எச்சரித்துள்ளார். 
 
தமிழக அரசின் அகம்பாவம் உச்ச கட்டத்துக்கு சென்றுள்ளது என்றும் ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என்றும் கோவையில் செய்தியாளர்களை பேசிய போது எச் ராஜா கூறியுள்ளார். 
 
ஆளுநர் என்பவர் உளவுத்துறை அதிகாரி மட்டுமல்ல புத்திசாலியும் கூட என்றும் ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என்றும் பாஜகவிற்கு பிரச்சாரம் இறங்கிய ராகுல் காந்தி தான் என்றும் அவர் பேசிவிட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார். 
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டதை கண்டித்து சீமான் திருமாவளவன் உள்ளிட்ட ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி தந்தது என்றும் ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மட்டும் தொடர்ந்து தடை விதித்து வந்தனர் என்றும் தமிழக அரசின் அகம்பாவம் உச்ச கட்டத்துக்கு சென்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்