முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுக, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அக்கட்சி பாஜகவின் 'பி' டீம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவை இனி அதிமுக என அழைப்பதற்கு பதிலாக அக்கட்சியை மோடிமுக என்று தான் அழைக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னதாக காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கார்த்தி சிதம்பரம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பேசிய அவர் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஸ்டாலின் முதல்வராக போகிறார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.