திகார் சிறையில் தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலா: கிண்டலடிக்கும் பாஜக!

புதன், 26 ஏப்ரல் 2017 (15:03 IST)
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ஆகியோர் சிறையில் உள்ளதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டலடிக்கும் விதமாக தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அதிமுக அம்மா கட்சியை வழி நடத்தி வந்தார். இவர் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் அதிமுக அம்மா கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களும் சிறையில் உள்ளதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டலடித்துள்ளார். பொதுசெயலாளர் பெங்களுரு சிறையில்! துணை பொதுசெயலாளர் திஹார் சிறையில்! அருமையான இயக்கம் அதிமுக என எச்.ராஜா தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்