திமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா: நக்கலடிக்கும் எச்.ராஜா!

புதன், 27 டிசம்பர் 2017 (13:54 IST)
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் படுதோல்வியடைந்து டெப்பாசிட் தொகையை இழந்தது. திமுகவின் இந்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காதது.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் திமுகவால் டெப்பாசிட்டை கூட தக்கவைக்க முடியவில்லை.
 
இந்நிலையில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்ததால் அது மக்கள் நல கூட்டணியை போல தோல்வி கூட்டணியாக மாறியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஏற்கனவே அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திருமா கூறிய கருத்தால் எச்.ராஜா கோபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
இதனையடுத்து இரண்டு நாளா டுவிட்டர் பக்கம் காணவில்லை என ஒரு டுவிட்டர் பயணாளி எச்.ராஜாவிடம் கேட்ட கேள்விக்கு, திருமாவளவன் திமுகவை ம.ந.கூ வாக மாற்றியதை ரசித்துக்கொண்டு இருக்கிறேன் என கூறி நக்கலடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்