எச்ச ராஜான்னு கூப்புடுறாங்களே ஏன்?: பதில் அளித்த எச்.ராஜா!

செவ்வாய், 30 மே 2017 (15:51 IST)
தற்போதைய அரசியல்வாதிகளில் பலர் இணையத்தை அதிகமாக பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் சில நேரங்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதில் அளிக்கின்றனர்.


 
 
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் கேள்வி கேட்ட ஒருவருக்கு அவர் பதில் அளித்தது சுவாரஸ்யமாக உள்ளது. எச்.ராஜா டுவிட்டரை அதிகமாக பயன்படுத்துபவர். அவர் தனது கருத்துக்களை அதில் பதிவிடுவது வழக்கம்.
 
எச்.ராஜா கூறும் கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும். இதனால் எச்.ராஜாவை அவரது எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளத்தில் எச்ச ராஜா என விமர்சித்தும் கிண்டலடித்தும் வந்தனர். இந்நிலையில் நாராயண கனேஷன் என்ற டுவிட்டர் பயனாளி ஒருவர் எச்.ராஜாவிடம் உங்கள எச்ச ராஜான்னு சொல்றாங்களே ஏன் என் கேட்டிருந்தார்.


 
 
அதற்கு பதில் அளித்த எச்.ராஜா சுப்பிரமணியன் சுவாமி ஸ்டைலில் பொறுக்கிகள் தான் என்னை அப்படி கூறுகிறார்கள் என உங்களுக்கு தெரியாதா என கேட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்