பட்டுக்கோட்டை காசாங்குளத்தில் மூதாட்டி ஒருவரின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. உயிரிழந்துவிட்டதாக நினைத்த அப்பகுதி மக்கள் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வேடிக்கை பார்த்தும், செல்போனில் படம் பிடித்தும் வந்துள்ளனர்.
பிறகு தீயணைப்பு படையினர் சடலம் என்று நினைத்து மூதாட்டியை குளத்திலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து, நாடியை பிடித்து பார்த்தபோது உயிர் இருப்பதை அறிந்தனர். பிறகு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல ஆட்டோவை அழைத்துள்ளனர். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச செல்ல முன்வராமல் சென்றுவிட்டார்.