மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு : உயர் நீதிமன்றம் அதிரடி...

புதன், 31 அக்டோபர் 2018 (16:28 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் 7ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை 14 பேர் கூட்டு பலாத்கார வழக்கை சி.பி.ஐ.எனப்படும் மத்திய  புலனாய்வு துறைக்கு மாற்றக்கோரியிருந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ள 14 பேருன் சார்பாக அளிக்கப்பட்டிருந்த மனைவில் தங்கள் மீதான வழக்கை ஊடங்கள் வேறுமாதிரி திசை திருப்பிவிட்டம என தெரிவித்திருந்தனர்.
 
இது குறித்து இனு நடைபெற்ற விசாரணையின் போது குற்றப்பத்திரிக்கை தாக்க்ல் செய்யப்பட்டுள்ள நிலையில் மனுதாரரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்தரமும் இல்லை என அயனாவரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அளித்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிரிந்தது.
 
இதன்பின்பு நீதிபதி நடத்திய விசாரணியிம் போது கூறியதாவது:
 
இப்போது நடந்து வருகிற விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றுவதை ஏற்க முடியாது.அதேசமயம் இந்த விசாரணை உரிய முறையில்தான் நடந்து வருகிறது .இவ்வாறு கூறிய நீதிபதி  14 பேரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்