சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரயில் பேருந்து உள்பட எந்த விதமான போக்குவரத்தும் இல்லை என்பதும் இதனால் மக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெரிய ஆலயங்களில் வழிபாடுகள், கொண்டாட்டங்கள் என எதுவுமே இல்லாமல் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழா கொண்டாட்டத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக சுதந்திர தின கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது
 
மாநிலம் முழுவதும் சுதந்திர தினம் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதால் யாரும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக உள் மாவட்டங்களில் அதிகம் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்