தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்டு மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 11 ஆம் தேதி நிறைவுபெற்றன. இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பள்ளி வாரியாக அரசு தேர்வுகள் இயக்கம் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட்டுள்ளது. அதில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களின் 84.76 சதவீதம் எனக் கூறியுள்ளது. இது சராசரி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை விட 5 சதவீதம் குறைவாகும். மேலும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 93.64 %, மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 98.26 %, இருபாலர் பள்ளியில் 91.67 %, பெண்கள் பள்ளியில் 93.75 %, ஆண்கள் பள்ளி 83.47 % எனவும் தேர்ச்சி சதவீதம் உள்ளது.