அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் இனி அரசுப் பணி...! அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!

Senthil Velan

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (10:43 IST)
பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு  கருணை அடிப்படையில் இனி அரசு பணி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசு பணி வழங்கப்படுவது போல, மருத்துவத்துறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
மருத்துவர்கள் இறந்து 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
 
வாரிசுகள் விண்ணப்பித்தால் 3 விதமான பணிகளை வழங்க முடியும் என்றும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்