டிசம்பர் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு: ஆந்திர மாநில அமைச்சர் அறிவிப்பு..!

சனி, 25 நவம்பர் 2023 (14:53 IST)
டிசம்பர் மாதம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறும் என ஆந்திர மாநில அமைச்சர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும்  இதனை வலியுறுத்தி வருகிறார்.

ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை  பாமக உட்பட மற்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மாநில தகவல் மற்றும்  மக்கள் தொடர்பு அமைச்சர் சீனிவாசா வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அங்கு இரண்டு நாட்கள் சோதனை அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்