ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு?

வியாழன், 4 பிப்ரவரி 2021 (19:39 IST)
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கல்லூரி கட்டணம் குறித்து மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்துள்ளது 
 
இதுகுறித்த கட்டணங்கள் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த உத்தரவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து தற்போது பார்ப்போம். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக் கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் எனவும் பிஎஸ் படிப்பிற்கு ரூபாய் 16610 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 
 
கட்டணம் குறைப்பு தொடர்பாக மாணவர்கள் போராடி வரும் நிலையில் அரசின் இந்த உத்தரவு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து 42 நாட்களாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்