ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன.
ஆளுநரை பற்றி தவறாக, ஒருமையாக, தரக் குழுவாக பேசுவது மிகவும் தவறு. கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். ஆளுநரை முதலமைச்சர் நேரடியாக சந்தித்து நட்புறவோடு பேச வேண்டும். ஆளுநர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மாநில அரசுகள் கொடுப்பதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்