நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்.. ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை விடுத்த முதல்வர்..!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:07 IST)
தமிழக வந்த ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்ற முதல்வர் முக ஸ்டாலின், ஜனாதிபதியிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
ஓர் ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்பு  மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  
 
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஏழை மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கு எதிரானது என்றும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தகுதியான மாணவர்களை மருத்துவக் கனவு பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  ஜனாதிபதியுடன் நேரில் வலியுறுத்தி உள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்