மேலும், ''காரணம் எதுவும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். காரணம் எதுவும் கூறாததால் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பிவைக்க முடியாது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவத் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், இம்மாநிலத்தில் ஆளுனராக பவாரிலால் புரொஹித் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், ' மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும் ?' என என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.