தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு வரும் நிலையில், இதுவரை 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடியுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
''பள்ளிகளின் வளர்ச்சி, தேர்ச்சி விகிதம், மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு, மாணவர்களின் தன்னொழுக்கம் இவை அனைத்திற்கும் பொறுப்பானவர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களே ஆவர்!
அத்தகைய தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடும் வகையில், இதுவரை 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2293 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடி, பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பொதுத் தேர்வுகளில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தை அடைதல் போன்றவைகள் குறித்து ஆலோசனை செய்தோம்.