வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லை: ஆளுனர் ஆர்.என்.ரவி

வெள்ளி, 23 ஜூன் 2023 (11:13 IST)
வேலைவாய்ப்பை பெரும் அளவிற்கு தமிழகத்தில் திறமையான இளைஞர்களை இல்லை என தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன என தமிழக ஆளுநர் ரவி பேசியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக ஆளுநர் ரவி சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கரத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியபோது நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்றும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு கல்வி மட்டும் போதாது என்றும் தனித்திறமை வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தன்னை சந்தித்தபோது தமிழ்நாட்டு மாணவர்களிடம் வேலை வாய்ப்புக்கான போதிய திறன் இல்லை என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான திட்டம் என்றும் இதனால் திறன்மிக்க இளைஞர்கள் உருவாகுவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்