சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வியாழன், 22 ஜூன் 2023 (10:09 IST)
ஆளுநர் ரவி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது சனாதன தர்மம் பற்றி பேசி வருவார் என்பதும் இதற்கு திமுக உள்பட திராவிட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வள்ளலார் குறித்து ஆளுநர் ரவி கூறியபோது அறியாமை காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சில தவறாக நினைத்துள்ளனர் என்றும் பாரத தேசத்தில் யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தையும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது என்றும் தெரிவித்தார். 
 
வள்ளலாரின் நூல்களை படித்த போது பிரமிப்பு ஏற்படுத்தியது என்றும் பத்தாயிரம் வருட பழமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி பேசியதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்