தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வராக பதவியேற்றபின் முதன்முறையாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டிலேயே சந்தித்துள்ளார். ஓய்வில் உள்ள விஜயகாந்தை அவர் நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.