60 வயது அடைந்த அடுத்த நாளே அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களாக கருதப்படுவர்!

புதன், 15 செப்டம்பர் 2021 (21:05 IST)
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு.
 
முன்னதாக ஓய்வுபெறும் மாதத்தில் பிறந்தநாள் வரும் தேதியோ அல்லது விடுமுறை எடுக்கும் நாள் இருந்தால் அந்த மாதம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் திருத்தப்பட்ட அரசாணையின்படி 60 வயது அடைந்த மறுதினமே அரசு ஊழியர்கள் அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வூதியதாரர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்