போலி சித்த மருத்துவர் தித்தணிகாசலம் மீது குண்டாஸ்!

வியாழன், 21 மே 2020 (17:37 IST)
போலி சித்த மருத்துவர் தித்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தகவல். 

 
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது.  
 
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறிய திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாக தற்போது அந்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
ஜாமீனுக்கு கோரியும் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருத்தணிகாசலம் மீது வழக்குகள் அதிகமானதால் போலி சித்த மருத்துவர் தித்தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்