தீர்ப்பை வரவேற்கிறேன் - தீபா: அத்தையையும் குற்றவாளியாக ஏற்றுக்கொள்கிறாரா?

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:21 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். இதன்மூலம் வழக்கின் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவையும் குற்றவாளியாக ஏற்றுக்கொள்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஜெ. மரணமடைந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
 
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த தீர்ப்புக்கு தீபாவிடம் இருந்து வரவேற்பு கிடைத்திருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தீபா கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்தவர்கள் சிறைக்கு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
 
கட்சியில் சசிகலா தரப்பினர் தங்களது ஆதிக்கம் வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானும் நீக்கம் செய்வார்கள். ஜெயலலிதாவை ஏமாற்றி பல காரியங்களை செய்து வந்தார் சசிகலா என்றும் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்