சென்னை ஏரியில் தங்க சிலைகள்...

புதன், 7 பிப்ரவரி 2018 (20:40 IST)
சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு அருகேயுள்ள சேந்தமங்கலத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் தங்க சிலைகள் கிடப்பதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் மக்கள் அந்த பகுதியில் குவியத்துவங்கினர். 
 
தகவல் அறிந்து தாசில்தார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினரும் அங்கு விரைந்தனர். இதனையடுத்து ஏரியில் இருக்கும் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர். 
 
ஏரியில் இருந்து 11 சாமி சிலைகளை வெளியே எடுத்து மீட்டனர். அவை தங்க வண்ணத்தில் பளபளப்புடன் இருந்தன. இதனால் மக்கள் அதை தங்க சிலை என எண்ணினர். ஆனால், சோதனை செய்து பார்த்த போது அவை உண்மையான தங்கத்திலான சிலைகள் இல்லை என்பது தெரியவந்தது. 
 
தங்க சிலைகள் என்று நினைத்து கொள்ளை கும்பல் ஏதாவது கோயிலில் இருந்து இந்த சிலைகளை கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசிவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்