தங்கம் விலை நாளுக்கு நாள் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது.
உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களுக்குள் தங்கம் வேகமாக விலை உயர்ந்து வருகிறது. கடந்த 7ம் தேதி 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்ந்தது.
நேற்றைய நிலவரத்தில் இருந்து இன்று சற்று விலை குறைந்துள்ளது தங்கம். ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.10,270க்கும் விற்பனையாகிறது.
கடந்த 15ம் தேதி ரூ.81,680க்கு விற்று வந்த ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.82,160 ஆக உள்ள நிலையில் வார இறுதிக்குள் சற்று குறைந்து மீண்டும் வேகமாக உயரத் தொடங்கலாம் என முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Edit by Prasanth.K