மூன்று நாள் இறக்கத்திற்கு பின் இன்று திடீரென உயர்ந்த தங்கம் விலை!

புதன், 11 ஆகஸ்ட் 2021 (10:04 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4373 என விற்பனையாகி வருகிறது என்பதும்,. அதேபோல் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 80 உயர்ந்து ரூபாய் 34984.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4737.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37896.00 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் வெள்ளியின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 67.70 எனவும், இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67700.00 என விற்பனையாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்