அப்போது அஜித்தை கொல்ல வேண்டும் என முத்துராணியின் அப்பா முருகானந்தம் தன் நணர்களுடன் சதித்திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் கீழப்பழுவூர் பெட்ரோல் பங்கில் அருகில் கார் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே வந்த முருகானந்தமும் அவரது நண்பர்கள் காரில் கண்ணாடியை உடைத்து: அஜித், அவரது குடும்பத்தினர் உட்பட எல்லோரையும் அருவாளால் கண்டபடி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் அஜித்தின் குடும்பத்தினர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் 5 பேரையும் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட முகராஜ், முரளிகிருஷ்ணன், விக்னேஷ்வரன், ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் முத்துராணியின் தந்தை முருகானந்தத்தை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.